
மும்பை,
பழம்பெரும் இந்தி நடிகர் தீரஜ் குமார் (வயது 79. இவர் 1970ம் ஆண்டு முதல் பல்வேறு இந்தி, பஞ்சாபி மொழி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். மேலும், பல்வேறு டிவி சீரியல்களிலும் நடித்துள்ள தீரஜ் குமார், தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இதனிடையே, நடிகர் தீரஜ் குமார் வயதுமுதிர்வு, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து, அவர் மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், நடிகர் தீரஜ் குமார் இன்று உயிரிழந்தார். வயது முதிர்வு, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தீரஜ் குமார் சிகிச்சை பலனின்றி இன்று காலை 11 மணிக்கு உயிரிழந்தார். அவரது மறைவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீரஜ் குமார் மறைவிற்கு திரைத்துறையினர் உள்பட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளார்.