பறவைகள் சரணாலயமாகும் சாமநத்தம் கண்மாய் பகுதி கடிதம் அனுப்பியது வனத்துறை

1 month ago 4

 

மதுரை, டிச. 9: தென் தமிழகத்தின் முக்கிய நதிகளில் ஒன்றான வைகையால் பாசன வசதி பெறும் மாவட்டங்களில் மதுரை முக்கியமானது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்மாய்கள் மற்றும் நீர்நிலைகளுடன் பெருநகரமாக வளர்ந்து வரும் மாவட்டத்தில் பல்வேறு கண்மாய்களில், சாமநத்தம் கண்மாய் என்பது முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், பறவைகளின் வாழ்விடமாகவும் உள்ளது. 2015 முதல் 2022 வரையிலான 7 ஆண்டுகள் இந்த கண்மாயில், மதுரை இயற்கை பண்பாட்டு மையம் சார்பில் நடந்த ஆய்வில், 155 இனங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து வனத்துறைக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதையேற்று, வனத்துறை தரப்பில் பொதுப்பணித்துறை (தற்போது நீர்வளத்துறை) மற்றும் வருவாய்த்துறையிடமிருந்து கண்மாயின் விபரங்களை பெற்று பறவைகள் சரணாலயமாக அறிவிக்க கடந்த ஆகஸ்ட் மாதம் கடிதம் கோரப்பட்டது. எனினும், அதற்கதான பணிகள் தற்போது வரை நடக்கவில்லை என தெரிகிறது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

சாமநத்தம் ஊராட்சி நிர்வாகத்திடமிருந்தும், நீர்வளத்துறையிடமிருந்தும் திட்டத்தை செயல்படுத்தக்கோரி தடையில்லா சான்றிதழ் மற்றும் கிராம ஊராட்சியின் தீர்மானம் கேட்டு விண்ணப்பித்துள்ளோம். இருதுறைகளிடம் இருந்தும் எங்களுக்கு இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. அதேபோல், கண்மாயை அளவிடும் பணிகளும், நீர்வளத்துறை தரப்பில் மேற்கொள்ளப்படவில்லை. இப்பணிகள் முடிந்து அறிக்கை கிடைத்தால் மட்டு மே, அரசிடமிருந்து திட்டத்தை செயல்படுத்த நிர்வாக ரீதியிலான ஒப்புதல் பெற முடியும். இவ்வாறு கூறினர்.

The post பறவைகள் சரணாலயமாகும் சாமநத்தம் கண்மாய் பகுதி கடிதம் அனுப்பியது வனத்துறை appeared first on Dinakaran.

Read Entire Article