மதுரை,
திண்டுக்கல் - திருச்சி ரெயில் பாதையில் தண்டவாள பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இதற்காக தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
அதன்படி, செங்கோட்டையில் இருந்து வருகிற 7, 8, 11-ந் தேதிகளில் மயிலாடுதுறை புறப்பட்டு செல்லும் ரெயில் (வ.எண்.16848), நாகர்கோவிலில் இருந்து வருகிற 9-ந் தேதி மும்பை செல்லும் ரெயில் (வ.எண்.16352), குருவாயூரிலிருந்து நாளை (திங்கட்கிழமை), 8, 10-ந் தேதிகளில் சென்னை செல்லும் ரெயில் (வ.எண்.16128), கன்னியாகுமரியில் இருந்து வருகிற 11-ந் தேதி ஹவுரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.12666), நாகர்கோவிலில் இருந்து வருகிற 7-ந் தேதி மும்பை செல்லும் ரெயில் (வ.எண்.16340), நாகர்கோவிலில் இருந்து வருகிற 11-ந் தேதி கச்சிகுடா செல்லும் ரெயில் (வ.எண்.16354) ஆகிய ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.
அதாவது, இந்த ரெயில்கள் விருதுநகரில் இருந்து மதுரை ரெயில் நிலையம் வருவதற்கு பதிலாக மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்று பாதையில் இயக்கப்படும்.
மறுமார்க்கத்தில், மயிலாடுதுறை-செங்கோட்டை ரெயில் (வ.எண்.16847) வருகிற 9, 11-ந் தேதிகளிலும், கச்சிகுடாவில் இருந்து வருகிற 10-ந் தேதி நாகர்கோவில் புறப்படும் ரெயில் (வ.எண்.07435), பனாரசிலிருந்து நேற்று கன்னியாகுமரி புறப்பட்ட தமிழ்ச்சங்கம் ரெயில் (வ.எண்.16368) ஆகியவை திருச்சியில் இருந்து காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக இயக்கப்படும். நாகர்கோவில் மற்றும் கோவையில் இருந்து வருகிற 7, 9, 11-ந் தேதிகளில் புறப்பட வேண்டிய பகல் நேர ரெயில்கள் (வ.எண்.16321/16322) கரூர், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக இயக்கப்படும்.
மதுரையில் இருந்து வருகிற 9-ந் தேதி பிகானீர் புறப்படும் அனுராவத் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.22631) திண்டுக்கல் வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும். குஜராத் ஒகாவில் இருந்து வருகிற 7-ந் தேதி ராமேசுவரம் புறப்படும் ரெயில் (வ.எண்.16734) மதுரை வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக திருச்சி, காரைக்குடி, மானாமதுரை வழியாகவும், கொல்லத்தில் இருந்து வருகிற 11-ந் தேதி செகந்திராத் புறப்படும் சிறப்பு ரெயில் (வ.எண்.07176) விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாகவும் இயக்கப்படும்.
மதுரை-சென்னை தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.22671/22672) வருகிற 7-ந் தேதி இரு மார்க்கங்களிலும் திருச்சி வரை மட்டும் இயக்கப்படும். ஈரோடு-செங்கோட்டை ரெயில் (வ.எண்.16845) நாளை (திங்கட்கிழமை) மற்றும் செங்கோட்டை-ஈரோடு ரெயில் (வ.எண்.16846) ஆகிய ரெயில்கள் வருகிற 7-ந் தேதி கரூர் வரை மட்டும் இயக்கப்படும். திருச்செந்தூர்-பாலக்காடு ரெயில் (வ.எண்.16731/16732) வருகிற 9,11-ந் தேதிகளில் இரு மார்க்கங்களிலும் திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படும். ஒகாவில் இருந்து நாளை மற்றும் மதுரையில் இருந்து வருகிற 10-ந் தேதி புறப்படும் ஒகா சிறப்பு ரெயில் (வ.எண்.09520/ 09519) விழுப்புரம் வரை மட்டும் இயக்கப்படும்.