பப்புவா கியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

9 hours ago 4

போர்ட் மார்ஸ்பி,

பப்புவா நியூ கினியாவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 2.11 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவானதாக ஜெர்மனி புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

195.3 கிமீ ஆழம் கொண்ட இந்த நிலநடுக்கம், 5.49 டிகிரி தெற்கு அட்சரேகை மற்றும் 147.52 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பப்புவா நியூ கினியாவில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. ஆனால் பொருளிழப்புகள் உள்ளிட்ட பிற பாதிப்புகள் பற்றிய உறுதியான தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.

முன்னதாக கடந்த 12ம் தேதி, பப்புவா நியூ கினியாவின் பங்குனாவில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. நிலநடுக்கத்திற்கான தாக்கம் அதிகம் ஏற்பட கூடிய பகுதியில் பப்புவா நியூ கினியா உள்ளது. தென்கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பெருங்கடலோர பகுதிக்கு உட்பட்ட நிலநடுக்கம் அதிகம் ஏற்பட கூடிய இடத்தில் அது அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article