பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

2 weeks ago 5

மதுரை: பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117வது ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் அவரின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் மருது சகோதரர்களின் சிலைகளுக்கும் முதலமைச்சர் மாலை அணிவித்து செலுத்தினார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117வது பிறந்த நாள் விழா மற்றும் 62வது குருபூஜை பசும்பொன்னில் இன்று நடைபெற உள்ளது. இதில், தமிழக அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டு மரியாதை செலுத்த உள்ளனர்.

இந்நிலையில் மதுரை மாவட்டம் கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்தும், அவரது உருவப்படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

முதல்வரை தொடர்ந்து அமைச்சர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், பெரியகருப்பன், ஐ.பெரியசாமி, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு, மற்றும் ராஜகண்ணப்பன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மாமன்னர் மருது சகோதரர்கள் உருவச் சிலைக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் முதல்வர் மு.க. ஸ்டாலின் சாலை மார்க்கமாக ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் சென்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவில் பங்கேற்கிறார்.

The post பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Read Entire Article