நெல்லையில் பைக் மீது லாரி மோதி விபத்து: குழந்தை உட்பட 4 பேர் உயிரிழப்பு

2 days ago 4

நெல்லை,

நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் ரெயில்வே மேம்பாலம் அருகே பைக் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பைக்கில் பயணம் செய்த ஒரு குழந்தை உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் 4 பேரின் உடலை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னால் சென்ற லாரியை, பைக்கில் சென்றவர்கள் முந்திச் செல்ல முயன்றபோது விபத்து ஏற்பட்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article