நெடுஞ்சாலை துறையின் ரூ.160 கோடி பேக்கேஜ் டெண்டருக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

11 hours ago 2

மதுரை: புதுக்கோட்டை மாவட்டத்தில் நெடுஞ்சாலைத் துறையின் ரூ.160 கோடி மதிப்புள்ள பேக்கேஜ் டெண்டருக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

புதுக்கோட்டையைச் சேர்ந்த முத்துக்குமார் உட்பட 8 முதல் நிலை ஒப்பந்தக்காரர்கள், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘புதுக்கோட்டை மாவட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறை கண்காணிப்பாளர் சார்பில் ரூ.75 கோடியில் 18 சாலைப் பணிகளுக்கும், நபார்டு மற்றும் கிராமப்புற சாலைகள் திட்டத்தில் ரூ.85 கோடியில் 31 சாலைப் பணிகளுக்கும் பேக்கேஜ் டெண்டர் முறையில் கடந்த அக்டோபர் மாதம் ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியிடப்பட்டது. மாவட்டத்தில் 50 முதல்நிலை ஒப்பந்தக்காரர்கள் உள்ளனர். பேக்கேஜ் முறையால் டெண்டரில் 10 ஒப்பந்தக்காரர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் சூழல் உள்ளது.

Read Entire Article