நிலவிலிருந்து பாறைகளை பூமிக்கு எடுத்து வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல்

1 day ago 2
நிலவிலிருந்து மண், பாறைகளை பூமிக்கு எடுத்து வந்து ஆய்வு செய்யும் சந்திரயான் 4 திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய பின் பூமிக்கு மீண்டும் வருவதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்கவும் அத்திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெள்ளி கிரகத்தின் வளிமண்டலம், புவியியலை ஆய்வு செய்து அறிவியல் தரவுகளை சேகரிக்கும் திட்டம், 'பாரதிய அந்தரிக்ஷ் நிலையம்' எனப்படும் விண்வெளி ஆராய்ச்சி மையம் அமைப்பது உள்ளிட்ட திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் வகையில், குறைந்த செலவிலான 'என்.ஜி.எல்.வி.' என்றழைக்கப்படும் அடுத்த தலைமுறைக்கான விண்கலத்தை உருவாக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல், ராபி பருவத்தில் பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உரங்களுக்கு 25,475 கோடி ரூபாய் மானியம் வழங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Read Entire Article