நியூயார்க்கில் இந்து கோவில் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்

2 days ago 5

நியூயார்க்,

அமெரிக்காவின் நியூயார்க்கில் ராபின்ஸ்வில்லி நகரில், சுவாமி நாராயண் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில், அமெரிக்காவின் மிகப்பெரிய இந்து கோவில் எனவும், உலகின் 2வது மிகப்பெரிய கோவில் எனவும் சிறப்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், கோவிலில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் புகுந்து சேதப்படுத்தியுள்ளனர். இதற்கு அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'இது போன்ற செயலை ஏற்றுக்கொள்ள முடியாது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளூர் மக்களுடன் தொடர்பில் இருக்கிறோம்.

கொடூரமான செயலுக்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கையை உறுதி செய்ய அமெரிக்க சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அமெரிக்காவில் சமீப காலமாக இந்து கோவில்கள் மீது நடந்து வரும் தாக்குதல் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

சமூகவலைதளத்தில் வெளியான வீடியோவில், கோவிலுக்கு வெளியே உள்ள சாலைகள், பலகைகளில்  காலிஸ்தான் ஆதரவாளர்களின் அக்கிரம செயல்பாடுகள் பதிவாகியுள்ளன. அமெரிக்காவின் ஸ்வாமி நாராயண் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் சுக்லா கூறியதாவது:

இந்த தாக்குதல் சம்பவத்தில் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரிக்க வேண்டும். இந்து கோவிலைத் தாக்குபவர்களின் கோழைத்தனத்தைப் புரிந்துகொள்வது கடினம் என்றார்.

Read Entire Article