புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் 25ம் தேதி தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில் 15 மசோதாக்களை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு பட்டியலிட்டுள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகின. புதிதாக 5 மசோதாக்களையும், நிலுவையில் உள்ள 10 மசோதாக்களையும் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே நிலுவையில் உள்ள வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது. கடந்த கூட்டத்தொடரில் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கூட்டுக்குழு ஆலோசனை நடத்தி வரும் 29ம் தேதி தனது அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்பிக்க உள்ளது.
இதுதவிர கூட்டுறவு பல்கலைக்கழகங்கள், இந்திய துறைமுகங்கள், சரக்கு மற்றும் பயணிகள் கப்பல் போக்குவரத்து, வணிக கப்பல் போக்குவரத்து, டெல்லி மாவட்ட நீதிமன்றங்களின் மேல்முறையீட்டு அதிகார வரம்பை ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.20 ஆக உயர்த்துவது, பஞ்சாப் நீதிமன்றங்கள் சட்ட திருத்தம் உள்ளிட்ட 5 புதிய மசோதாக்கள் கொண்டு வரப்பட உள்ளன.
The post நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 15 மசோதாக்கள் தாக்கல்: ஒன்றிய அரசு திட்டம் appeared first on Dinakaran.