நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்திற்கு புனித நீர் ஊர்வலம்

1 week ago 5

 

நாகப்பட்டினம், செப்.14: நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புனித நீர் ஊர்வலம் நேற்று நடந்தது. நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டையில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் கும்பாபிஷேகம் வரும் 15ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக நாகப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன் கோயிலில் இருந்து நேற்று புனித நீர் யானையில் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்காக கங்கை, யமுனை, சிந்து, கோதாவரி, நர்மதை உள்ளிட்ட 9 புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் யானை மேல் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. நாதஸ்வர மேளக்கச்சேரி, ட்ரம்ஸ் இசையுடன், கரகாட்டம் ,மயிலாட்டம் ஒயிலாட்டம் சிலம்பாட்டம் கும்மியாட்டம் என களை கட்டியது.

அப்போது முத்து மாரியம்மனுக்கு விரதம் இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் மஞ்சளாடை அணிந்தவாறு முளைப்பாரி எடுத்தும், பால் கூடங்களை சுமந்தும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக அக்கரைப்பேட்டை கோயில் சென்றனர். புனித நீர் ஊர்வலத்தில், சிவன், பார்வதி, பச்சை காளி பவள காளி என மேளதாள வாத்தியங்களுக்கு ஏற்றவாறு வழிநெடிகிளும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், பக்தி பரவசத்துடன் ஆட்டம் போட்டும், பாட்டுப்பாடியும் கும்மியடித்தும் சென்றனர்.

The post நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்திற்கு புனித நீர் ஊர்வலம் appeared first on Dinakaran.

Read Entire Article