நகராமல் நங்கூரமிட்டு நிற்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம் தகவல்

2 hours ago 1

சென்னை: வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 6 மணி நேரமாக நகராமல் அதே இடத்தில் நீடிக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிலையில் தற்போது நகரமல் ஒரே இடத்தில் நீடிக்கிறது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மறுநாள் வட தமிழ்நாடு – புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் காரைக்கால் மாமல்லபுரம் இடையே புயல் சின்னம் கரையை கடக்கும். கரையை கடக்கும்போது 50-60 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்; இடையிடையே 70 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும்

நாகைக்கு 320 கி.மீ தென் கிழக்கிலும், திரிகோணமலைக்கு 100 கி.மீ கிழக்கு வடகிழக்கிலும் புயல் சின்னம் மையம் கொண்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து 410 கி.மீ. தென் கிழக்கில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. புயல் சின்னம் சென்னைக்கு 490 கி.மீ. தெற்கு தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது. புயல் சின்னம் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும். புயல் சின்னம் புயலாக வலுப்பெற்ற பிறகும் தொடர்ந்து வடக்கு வடமேற்கு திசையில் நகரக் கூடும் என்று தெரிவித்துள்ளது.

The post நகராமல் நங்கூரமிட்டு நிற்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article