தொழில்நுட்பப் பணி காரணமாக தமிழ்நிலம் இணையவழி சேவை தற்காலிகமாக நிறுத்தம்

15 hours ago 1

சென்னை: நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பு: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் இணையவழி பட்டா மாறுதல் சேவையான “தமிழ்நிலம்” மென்பொருளில், விவசாயிகள் விவரப் பதிவேடு தொடர்பான தொழில்நுட்பப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனால் இன்று (28ம் தேதி) காலை 10 மணி முதல் 31ம் தேதி வரை மாலை 4 மணி வரை இணையவழி பட்டா மாறுதல் மேற்கொள்ளும் ”தமிழ்நிலம்”(https://tamilnilam.tn.gov.in/Revenue மற்றும் https://eservices.tn.gov.in/eservicesnew/index.html) இணையவழி சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

The post தொழில்நுட்பப் பணி காரணமாக தமிழ்நிலம் இணையவழி சேவை தற்காலிகமாக நிறுத்தம் appeared first on Dinakaran.

Read Entire Article