நீலகிரி,
தீபாவளி பண்டிகை நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தீபாவளிக்கு அடுத்த நாளான இன்று தமிழக அரசால் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து அடுத்த 2 நாட்கள் வார விடுமுறை என்பதால், பொதுமக்கள் தொடர் விடுமுறையை கொண்டாட குடும்பத்தோடு சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
குறிப்பாக நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கவும் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
தொடர் விடுமுறையை கொண்டாட ஊட்டியில் குவிந்த சுற்றிலா பயணிகள், அங்குள்ள அரசு தாவரவியல் பூங்கா, பைக்காரா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட இடங்களை கண்டு களித்தனர். ஊட்டியில் லேசான சாரல் மழை பெய்து வரும் சூழலில், பொதுமக்கள் குடைகளை பிடித்தவாறு அங்குள்ள சுற்றுலா தளங்களை பார்வையிட்டு, புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.