தேள் கடித்து சிறுவன் பலி

1 month ago 7

செய்யாறு, நவ.20: செய்யாறு அடுத்த மடிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(35), விவசாய கூலித்தொழிலாளி. இவரது 2வது மகன் கிஷோர்(9). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், கிஷோர் கடந்த 17ம் தேதி காலை வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கிருந்த தேள் கடித்துள்ளது. உடனே அவரை பெற்றோர் மீட்டு செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறுவன் கிஷோர் நேற்று இறந்தார்.
இதுகுறித்து மணிகண்டன் தூசி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் பாபா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post தேள் கடித்து சிறுவன் பலி appeared first on Dinakaran.

Read Entire Article