தேர்தலில் பொய் வாக்குறுதிகளை அறிவிப்பதில் மும்முரம்: பாஜக, காங்கிரஸ் மீது மாயாவதி குற்றச்சாட்டு

1 week ago 4

லக்னோ,

மராட்டிய சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 20-ந்தேதி நடக்கிறது. 74 தொகுதிகளில் பா.ஜனதா, காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தல், இம்மாதம் 13 மற்றும் 20-ந்தேதிகளில் 2 கட்டங்களாக நடக்கிறது. இரு மாநிலத்திலும் பதிவான வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது. இந்தநிலையில் ஜார்கண்ட் மற்றும் உத்தர பிரதேசத்தில் பாஜகவும் காங்கிரசும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. பிரசாரத்தில் பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறது.

இது குறித்து பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

பணவீக்கம் மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தால் கோடிக்கணக்கான மக்கள் சிரமப்பட்டு வரும் நிலையில், மராட்டிய மற்றும் ஜார்கண்ட் தேர்தல் பிரசாரத்தில் பாஜகவும் காங்கிரசும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துக்கொண்டு பொய்யான வாக்குறுதிகளை அறிவித்து வருகின்றனர்.

இரு கட்சிகளும் எதிர்மறை அரசியலில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. தேர்தல் பிரசாரத்தின்போது மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் பகுஜன் சமாஜ் கட்சி எந்த அறிக்கையையும் வெளியிடுவதில்லை. பாஜக மற்றும் சமாஜ்வாதி கட்சிகளின் ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட வேலைவாய்ப்புகளை விட தனது அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை அதிகம் என்று பதிவிட்டுள்ளார்.

Read Entire Article