தேனீக்கள் தாக்கியதில் ஒருவர் பலி

1 month ago 6

லக்னோ,

உத்தரபிரதேசம் முசாபராபாத் பகுதியைச் சேர்ந்தவர், சோனு. இவர் அப்பகுதியில் தேன் விற்பனை செய்யும் தொழில் செய்துவந்தார். இந்த நிலையில் நேற்று தேன் எடுப்பதற்காக சென்ற அவரை தேனீக்கள் தாக்கியுள்ளன.

இதனால் பாதிக்கப்பட்ட சோனுவை கிராம மக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பதேபூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article