தேசிய வங்கிக் கிளை முன்பு அமர்ந்து ராமேசுவரம் மீனவர்கள் போராட்டம்

1 month ago 5

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்று எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட 14 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி மீனவர்களின் உறவினர்கள் மற்றும் மீனவர்கள் தங்கச்சிமடத்தில் தேசிய வங்கிக் கிளை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த புதன்கிழமை காலை மீன்பிடிக்கச் சென்று வியாழக்கிழமை அதிகாலை இலங்கை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேசுவரத்தைச் சேர்ந்த இரண்டு விசைப்படகையும் அதிலிருந்த ராபின்சன், ராஜபிரபு, அரவிந்த் பாண்டி, முனீஸ்வரன் உள்ளிட்ட 14 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் அங்குள்ள வவுனியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Read Entire Article