சென்னை,
தேசிய பத்திரிகை தினம் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 16-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி டி வி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார் .
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகை மற்றும் ஊடகங்களில் நேர்மையாக, சுதந்திரமாக, மற்றும் நடுநிலையாக பணியாற்றுவோரை போற்றும் விதமாக கொண்டாடப்படும் தேசிய பத்திரிகை தினம் இன்று.
நாகரிக வளர்ச்சிக்கேற்ப தம்மைத் தகவமைத்துக் கொண்டு மழை, வெயில், புயல் என அனைத்து பேரிடர் காலங்களிலும் துடிப்புடன் செய்திகளை சேகரித்து மக்களுக்கு வழங்கும் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களின் சுதந்திரத்தையும், பத்திரிகையாளர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம். என தெரிவித்துள்ளார் .