துறைமுகத்தில் நிறுத்தப்பட்ட கப்பலில் இருந்து 2 கோடி முட்டைகளையும் இறக்க ஓமன் அரசு அனுமதி: ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி

5 hours ago 2

நாமக்கல்: நாமக்கல்லில் இருந்து ஓமன் நாட்டுக்கு கப்பலில் அனுப்பி வைக்கப்பட்ட ரூ.15 கோடி மதிப்பிலான 2 கோடி முட்டைகள் அந்த நாட்டு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. முட்டைகளின் எடை குறைவாக இருந்ததால் இறக்குவதற்கு அனுமதி கொடுக்கவில்லை. இதுகுறித்து எம்பிக்கள் ராஜேஸ்குமார், மாதேஸ்வரன் ஆகியோர், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். நாமக்கல் முட்டை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் நிர்வாகிகள் ஓமன் சென்று, அந்தநாட்டு அதிகாரிகளை சந்தித்து பேசினர்.

இந்நிலையில் ஓமன் அதிகாரிகள், துறைமுகத்தில் 41 கன்டெய்னர்களில் உள்ள முட்டைகளை இறக்க நேற்று அனுமதி அளித்தனர். இதனால் ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இது குறித்து, கால்நடை விவசாய பண்ணையாளர்கள் வர்த்தகர் சங்க பொதுச்செயலாளர் செந்தில் கூறுகையில், இந்த மாதம் இறுதிவரை ஓமன் சென்று சேரும் இந்திய முட்டைகளை இறக்கிக் கொள்ள அந்த நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது என்று தெரிவித்தார்.

The post துறைமுகத்தில் நிறுத்தப்பட்ட கப்பலில் இருந்து 2 கோடி முட்டைகளையும் இறக்க ஓமன் அரசு அனுமதி: ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article