துரைப்பாக்கம், முகப்பேர் பகுதியில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

6 hours ago 2

சென்னை: துரைப்பாக்கம் மற்றும் முகப்பேர் பகுதிகளில் செயல்படும் 2 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு நிலவியது. சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் பள்ளிக்கு நேற்று ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில், உங்களது பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது சிறிது நேரத்தில் வெடித்து சிதறும், என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம் இதுகுறித்து அருகிலுள்ள செம்மஞ்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளது.

இதுபற்றி, காவல் ஆய்வாளர் கிளாட்சன்ஜோஸ், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில், வெடிகுண்டு நிபுணர்கள் 4 பேர் சம்பவ இடத்துக்கு வந்து, பள்ளி முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.  சுமார் 3 மணி நேர சோதனையில் வெடிகுண்டு ஏதும் சிக்கிவில்லை. இதையடுத்து, அந்த மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, மிரட்டல் விடுத்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்: முகப்பேர் பகுதியில் உள்ள பிரபல தனியார் பள்ளிக்கு நேற்று காலை மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில், உங்கள் பள்ளியில் வெடிகுண்டு வைத்துள்ளோம். சற்று நேரத்தில் வெடிக்கும்,’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து உடனடியாக மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், ஊழியர்கள் அனைவரும் பள்ளி வளாகத்தை விட்டு வெளியேறினர். பின்னர் பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு மாணவ, மாணவிகள் வீட்டிற்கு அனுப் பிவைக்கப்பட்டனர்.

இதுசம்பந்தமாக பள்ளி நிர்வாகம் கொடுத்த தகவலின் பேரில், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார், மோப்ப நாய் உதவியுடன் வந்து பள்ளி முழுவதும் சுமார் 2 மணி நேரம் சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்காததால், இது வெறும் புரளி என்பது தெரியவந்தது. முகப்பேர் பகுதியில் உள்ள மற்றொரு பள்ளிக்கு கடந்த பிப்ரவரி மாதம் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், அதே பகுதியில் இயக்கி வரும் இந்த பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடதக்கது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post துரைப்பாக்கம், முகப்பேர் பகுதியில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Read Entire Article