திலக் வர்மா அதிரடி சதம்... தென் ஆப்பிரிக்காவுக்கு 220 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா

1 week ago 5

செஞ்சூரியன்,

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியாவும், 2-வது போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது.

இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையலான 3-வது டி20 போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் தான் சந்தித்த 2-வது பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார்.

மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் சர்மாவுடன், திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆடி ரன்குவிப்பில் ஈடுபட்டனர். 2-வது விக்கெட்டுக்கு 107 ரன்கள் சேர்த்த நிலையில் அபிஷேக் சர்மா அரை சதமடித்து ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஒரு ரன்னிலும், பாண்ட்யா 18 ரன்களிலும், ரிங்கு சிங் 8 ரன்களிலும் வெளியேறினர்.

அதிரடியைத் தொடர்ந்த திலக் வர்மா சதமடித்து அசத்தினார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 219 ரன்கள் குவித்தது. திலக் வர்மா 107 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் செய்து வருகிறது.

Read Entire Article