திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் உண்டியலில் தவறவிட்ட நபருக்கு ஐபோன் திரும்ப வழங்கப்பட்டது: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி

17 hours ago 2

பெரம்பூர்: சென்னை திருவிக.நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவருமான பி.கே. சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோர் இன்று காலை நடைபயணம் மேற்கொண்டு மாநகராட்சி பூங்கா, குடிநீர் வாரிய அலுவலகம், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, சென்னை மெட்ரோ கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு செய்து மக்களிடம்குறைகளை கேட்டறிந்தார். துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொத்தவால்சாவடி பகுதிகளில் ஆய்வு செய்து மக்களிடம் குறைகள் கேட்டறிந்தார்.

இதன்பிறகு நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது; திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் அம்பத்தூரை சேர்ந்த தினேஷ் என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் தரிசனம் செய்ய வந்துபோது தன்னுடைய ‘ஐபோன் 13 புரோ’ ரக போனை தவறுதலாக உண்டியலில் போட்டுள்ளார். இதன்பின்னர் கோயில் நிர்வாகத்திடம் நடந்ததைக் கூறி, மொபைல்போனை திரும்பக் கேட்டு உள்ளார். இதன் அடிப்படையில், இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின்படி ஆய்வு செய்து உண்டியலுக்கு வரும் பணத்தை தவிர தங்கம், வெள்ளியாக இருந்தாலும் அவற்றை கோயில் கணக்கில் வரவு வைக்கப்பட்டு அதனை ஏலத்தில் விடுவதுதான் நடைமுறையாகும். அந்த வகையில் உண்டியலில் விழுந்த செல்போனை ஏலத்தில் விட்டோம்.

அதன் உரிமையாளர் தினேஷ் அதிகபட்சமாக 10 ஆயிரம் ரூபாய் செலுத்தி பெற்றுக் கொண்டார். தொடர்ந்து 10 நாட்கள் கேள்விக்கு நேற்று திராவிட மாடல் ஆட்சி பதிலளித்துவிட்டது. இவ்வாறு கூறினார். மேயர் பிரியா கூறும்போது, ‘’வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகளை விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர இந்த ஆய்வுகள் உதவியாக இருக்கும். மக்களுடன் கலந்துரையாடி தேவையை நிவர்த்தி செய்து வருகிறோம். சாலையை சீர்செய்து தருவது போன்ற பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்படுகிறது. மாஸ் கிளீனிங், சாலை சீர் செய்தல் ஆகிய பணிகளை 5 நாட்களுக்குள் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றார்.

The post திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் உண்டியலில் தவறவிட்ட நபருக்கு ஐபோன் திரும்ப வழங்கப்பட்டது: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article