திருப்பதியில் ஜன.10 முதல் 19-ந்தேதி வரை வைகுண்ட ஏகாதசி தரிசனம்

3 hours ago 2

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி மாதம் 10 முதல் 19-ந்தேதி வரை வைகுண்ட ஏகாதசி தரிசனம் நடக்கிறது. இதனை முன்னிட்டு, திருமலையில் பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரி தலைமை தாங்கி பேசினாா். இதன் பின்னர் அவர் பேசியதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. ஆகையால், ஜனவரி 10 முதல் 19-ந்தேதி வரை 10 நாட்கள் பக்தர்களுக்கு வைகுண்ட துவார தரிசனம் வழங்கப்படும். வைகுண்ட ஏகாதசிக்கு இன்னும் 40 நாட்கள் மட்டுமே உள்ளதால், அந்தந்தத் துறை அலுவலர்களும் முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

10 நாட்களும் வைகுண்ட துவார தரிசனம் வழியாகச் சென்று சாதாரண பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முன்னுரிமை வழங்கப்படும். சாதாரண பக்தர்களுக்கு அதிக தரிசன நேரத்தை வழங்குவதற்கான டிக்கெட் ஒதுக்கீடு மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து இன்னும் 2 வாரங்களில் மற்றொரு ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும். ஜனவரி 9 முதல் 19-ந்தேதி வரை ஆர்ஜித சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. ஜனவரி 10-ந்தேதி தங்கத்தேரோட்டம், 11-ந்தேதி சக்கர ஸ்நானம் நடக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

  

Read Entire Article