திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி 7-ந்தேதி வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து

13 hours ago 1

திருப்பதி,

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா, ஆனிவார ஆஸ்தானம், உகாதி பண்டிகை, வைகுண்ட ஏகாதவி விழா என ஆண்டுக்கு 4 முறை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடப்பது வழக்கம். அதன்படி ஜனவரி மாதம் 10-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது.

அதையொட்டி ஜனவரி 10 முதல் 19-ந்தேதி வரை பக்தர்களுக்கு வைகுண்ட துவார தரிசனம் வழங்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜனவரி 7-ந்தேதி காலை 6 மணியில் இருந்து 10 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது. தூய்மைப்பணி முடிந்ததும், கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

இந்தப் பாரம்பரிய நிகழ்ச்சியை கருத்தில் கொண்டு ஜனவரி 7-ந்தேதி கோவிலில் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. எனவே ஜனவரி 6-ந்தேதியே வி.ஐ.பி. பிரேக் தரிசனத்துக்கான பரிந்துரை கடிதங்கள் ஏற்படப்பட மாட்டாது. இதற்கு பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article