திருத்துறைப்பூண்டியில் இயற்கை நுண் உரம் தயாரிக்கும் மையம்: நகர்மன்ற தலைவர் ஆய்வு

1 day ago 1

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி வேதை சாலையில் உள்ள இயற்கை நுண் உரம் தயாரிக்கும் மையத்தை நகர்மன்ற தலைவர் பார்வையிட்டார். திருத்துறைப்பூண்டி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இந்த 24 வார்டுகளிலும் தொடர்ந்து பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டு வருவது வழக்கம். நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன், ஒவ்வொரு வார்டுகளில் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தவர் நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன். அதன் பிறகும் தினந்தோறும் வார்டுகளில் நடக்கும் பணிகளை காலை 5 மணி முதல் பார்வையிட்டு வருகிறார்.

இந்நிலையில் திருத்துறைப்பூண்டி வேதை சாலையில் உள்ள இயற்கை நுண் உரம் தயாரிக்கும் மையத்தை நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் பார்வையிட்டார். இதில் சுகாதார ஆய்வாளர் மாரிச்சாமி, சுகாதார மேற்ப்பார்வையாளர் வீரையன் உள்ளிட்டோர் இருந்தனர். இதேபோல் நகராட்சி 15வது வார்டு சாமியப்பா நகர் பகுதியில் புதிய குடிநீர் லைன் அமைக்கும் பணியை நகர்மன்ற தலைவர் பார்வையிட்டார். இதில் சுகாதார ஆய்வாளர் மாரிச்சாமி, சுகாதார மேற்ப்பார்வையாளர் வீரையன் உள்ளிட்டோர் இருந்தனர்.

The post திருத்துறைப்பூண்டியில் இயற்கை நுண் உரம் தயாரிக்கும் மையம்: நகர்மன்ற தலைவர் ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article