திருத்தணி அருகே தூய்மை சேவை விழிப்புணர்வு நிகழ்ச்சி: கலெக்டர் தொடங்கி வைத்தார்

2 days ago 2

திருத்தணி: கிராமங்களில் சுகாதாரம் மற்றும் தூய்மையை உறுதிப்படுத்தும் வகையில் திருத்தணி அருகே தூய்மை சேவை விழிப்புணர்வு நிகழ்ச்சியை கலெக்டர் பிரபுசங்கர் தொடங்கி வைத்தார். ய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 17 முதல் அக்டோபர் 2ம் தேதி வரை மரம் நடுதல், சாலை ஓரத்தில் உள்ள குப்பைகள் அகற்றி குப்பை கொட்டும் இடங்களில் மரங்கள் நடுதல், பசுமை சூழல் உருவாக்குதல் போன்ற சுகாதார மற்றும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் ஒரு பகுதியாக திருத்தணி அருகே உள்ள பட்டாபிராமாபுரம் கிராமத்தில் தூய்மை சேவை விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. வட்ட கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊரகப் பகுதிகளில் சாலையோரங்களில் உள்ள குப்பைகளை அகற்றி குப்பை கொட்டும் இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

மேலும் பசுமை சூழல் உருவாக்குவதன் அவசியம், மரக்கன்று நட்டு பராமரித்து பாதுகாக்க வேண்டியது குறித்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் குப்பைகள் முழுமையாக அகற்றி மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து தூய்மையான திருவள்ளூர் என்ற இலக்கை அடைய அனைவரும் விழிப்புணர்வு பெற்று செயல்பட வேண்டும் என்று கலெக்டர் பிரபு சங்கர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.இந்த நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் சாலையோரங்கள் மற்றும் கொப்பைகள் கொட்டும் இடங்களில மரக்கன்றுகள் நடும் பணியை அவர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயக்குமார், திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம், சாந்தி, பட்டாபிராமபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தேவி பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திருத்தணி அருகே தூய்மை சேவை விழிப்புணர்வு நிகழ்ச்சி: கலெக்டர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Read Entire Article