பேராவூரணி, டிச. 24: திருச்சிற்றம்பலம் அருகே நெடுஞ்சாலையில் இருந்த பனைமரங்களை இரவில் வெட்டி சாய்த்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேராவூரணி ஒன்றியம் செருவாவிடுதி தெற்கு ஊராட்சியில் பட்டுக்கோட்டை-அறந்தாங்கி தேசிய நெடுஞ்சாலையில் தமிழக அரசால் பாதுகாக்கப்பட்டு வளர்த்து வந்த தமிழ் நாட்டின் மாநில மரமான பனைமரங்களை அனுமதியின்றி வெட்டிச் சாய்த்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பனைமரம் பாதுகாப்பு சுற்றுச்சூழல் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர் .
பட்டுக்கோட்டை – அறந்தாங்கி நெடுஞ்சாலையில் செருவாவிடுதி தெற்கு ஊராட்சியில் திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்திற்கும் போத்தியம்பாள் ஆர்ச்சுக்கும் இடையில் தமிழ்நாடு அரசால் பாதுகாக்கப்பட்டு வளர்த்து வந்த பனைமரங்களை எவ்வித அனுமதியுமின்றி சுயலாபத்திற்காக சுமார் 15 க்கும் மேற்ப்பட்ட பனைமரங்களை இயந்திரம் மூலம் இரவில் வெட்டி வேரோடு சாய்ந்துள்ளனர். அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த பனைமரங்களை சுயலாபத்திற்காக வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, மீதம் இருக்கும் பனைமரங்களை காக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
The post திருச்சிற்றம்பலம் அருகே நெடுஞ்சாலையில் 15 பனை மரங்கள் வெட்டி சாய்ப்பு நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.