திருச்சி, காஞ்சியில் ரூ.2,666 கோடி முதலீடு: சிகாகோவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து

1 week ago 12

சென்னை: திருச்சியில் ரூ.2,000 கோடி முதலீட்டில் மின்னணு உற்பத்தி நிறுவனம் அமைக்கவும், காஞ்சிபுரத்தில் ரூ.666 கோடி முதலீட்டில் மின்னணு உற்பத்தி நிறுவன விரிவாக்கத்துக்காகவும் ஜாபில், ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனங்களுடன் சிகாகோவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இளைஞர் திறன் மேம்பாட்டுக்காக ஆட்டோடெஸ்க் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் 5.365 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசின் சீரிய திட்டங்களால், இந்திய அளவில் பல பொருளாதார குறியீடுகளில் தமிழகம் முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது. மேலும் அதிக முதலீடுகளை ஈர்த்து, தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும், 2-வது பெரிய பொருளாதாரமாக விளங்கும் தமிழகத்தை வரும் 2030-ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் இலக்கை அடையவும், தொழில் துறை பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.

Read Entire Article