'திரு.மாணிக்கம்' படத்தின் டிரெய்லர் வெளியீடு

1 month ago 5

சென்னை,

இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் திரு.மாணிக்கம். நடிகை அனன்யா இந்த படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இயக்குனர் பாரதிராஜா, நாசர், தம்பிராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

'சீதா ராமம்' படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடலாசிரியர்கள் சினேகன், சொற்கோ மற்றும் இளங்கோ கிருஷ்ணன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த குமுளி, மூணாறு, மேகமலை, தேக்கடி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. ஜி.பி.ரவிக்குமார், சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி மற்றும் ராஜா செந்தில் இணைந்து தயாரித்துள்ளனர்.

ஒரு மனிதன் இன்றைய காலகட்டத்திலும் நேர்மையாக இருக்க முடியுமா? அதற்கான சாத்தியம் இருக்கின்றதா என்பதை பற்றி பேசும் படமாக உருவாகியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் 'பொம்மக்கா' பாடல் மற்றும் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்த படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் உரிமையை ஜீ 5 நிறுவனம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமுத்திரக்கனி நடித்த 'திரு.மாணிக்கம்' படத்தின் டிரெய்லரை நடிகர் துல்கர் சல்மான் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். இத்திரைப்படம் வரும் 27-ம் தேதி வெளியாகவுள்ளதாக டிரெய்லரில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி தம்பி ❤️❤️❤️❤️ https://t.co/kO4KvcQ6mz

— P.samuthirakani (@thondankani) December 9, 2024
Read Entire Article