சென்னை: திராவிட மாடல் ஆட்சி நிறைவேற்றும் திட்டங்களுக்கு உறுதுணையாக விளங்கிக் கொண்டிருப்பவர் நல்லகண்ணு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். பொதுவுடைமை இயக்கத்துக்கும் நூற்றாண்டு, நல்லகண்ணுவுக்கும் நூற்றாண்டு இப்படி ஒரு பொருத்தம் யாருக்கும் கிடைத்ததில்லை; நல்லகண்ணுவை வாழ்த்த வரவில்லை; வாழ்த்து பெற வந்திருக்கிறேன். எங்களை போன்றவர்களுக்கு தொடர்ந்து நல்லகண்ணு வழிகாட்ட வேண்டும். 2026 சட்டமன்ற தேர்தலில் 200 இடங்களையும் தாண்டி வரும் அளவுக்கு திமுக கூட்டணி அமைந்துள்ளது. கொள்கை கூட்டணி மட்டுமல்ல, மதச்சார்பின்மை கூட்டணி, நிரந்தர கூட்டணி என இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
The post திராவிட மாடல் ஆட்சி நிறைவேற்றும் திட்டங்களுக்கு உறுதுணையாக விளங்கிக் கொண்டிருப்பவர் நல்லகண்ணு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.