திண்டிவனம் அருகே ரெயில் தண்டவாளத்தில் திடீர் விரிசல்: பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு

4 hours ago 3

திண்டிவனம்,

சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு இன்று காலை 6 மணிக்கு ரெயில் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த ரெயிலில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இந்த நிலையில், ரெயில் திண்டிவனம் அருகே உள்ள ஓங்கூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது தண்டவாளத்தில் திடீரென அதிகப்படியான சத்தம் கேட்டது. இதனை அறிந்த லோகோ பைலட் உடனடியாக ரெயிலை நிறுத்தினார்.

உடனே இது குறித்து ரெயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் சோதனை செய்தனர். அப்போது தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் தண்டவாளத்தை ரெயில்வே ஊழியர்கள் சரி செய்தனர்.

அதன்பின்னர் திண்டிவனம் நோக்கி ரெயில் சென்றது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக ரெயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் உரிய நேரத்திற்கும் செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்தனர். தண்டவாள விரிசலை லோகோ பைலட் முன்கூட்டியே கணித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தண்டாவள விரிசல் காரணமாக பல ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

Read Entire Article