தரச் சான்றிதழுக்கான தகுதிகள் குறித்து பெரம்பலூர் தலைமை மருத்துவமனையில் காயகல்ப் குழுவினர் 2வது நாளாக ஆய்வு

5 hours ago 2

*18 சிகிச்சை பிரிவுகளையும் பார்வையிட்டனர்

பெரம்பலூர் : தரச் சான்றிதழுக்கான தகுதிகள் உள்ளனவா என்பது குறித்து பெரம்பலூர் அரசுத் தலைமை மருத்துவ மனையில் மாநில அளவிலான காயகல்ப் குழுவினர் 2வது நாளாக ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மருத்துவமனையில் உள்ள 18 சிகிச்சை பிரிவுகளையும் பார்வையிட்டனர்.

பெரம்பலூரில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் தூய்மை பாரதத் திட்டத்தின் கீழ், சுகாதாரமாக இருக்கும் அரசு மருத்துவமனைக்கு ஆண்டுதோறும் காயகல்ப் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

அதில், மத்திய அரசு வகுத்துள்ள தரம் பின் பற்றப்படுகிறதா, குறித்த காலத்தில் பொது மக்களுக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப் படுகிறதா, அனைத்து மருத் துவ உபகரணங்களும் பயன் பாட்டில் உள்ளனவா, ஷிப்ட் வாரியாக நியமிக் கப் பட்டுள்ள மருத்துவர்கள் பணிக்கு வந்துள்ளனரா, மருத்துவமனை வளாகம் சுத்தமாகவும், சுகாதாரமா கவும் பராமரிக்கப்பட்டு வருகிறதா என்பதை ஆய்வு செய்து, அதில் சிறப்பாக உள்ள மருத்துவ மனைக்கு, மாநில அளவில் முதல் பரிசு, இரண்டாம் பரிசு வழங்கப்படுகிறது.

இந்த விருது பெரம்பலூர் அரசுத் தலைமை மருத்துவ னைக்கு கடந்த ஆண்டும் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டுவரை இரண்டரை லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு பரிசுத்தொகை உயர்த்தப்பட்டு உள்ளதால் ரூ.6லட்சம் கிடைக்கும்என தெரிவிக்கப் படுகிறது.

இந்நிலையில் 2 நாட்கள் நடைபெறும் மாநில அளவி லான காயகல்ப் ஆண்டு ஆய்வு, பெரம்பலூர் அரசுத் தலைமை மருத்துவ மனை யில் 21ம் தேதி சனிக் கிழமை தொடங்கி, நேற்று (22ஆம்தேதி) இரண்டாவது நாளாக ஞாயிற்று கிழமை யும் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம், குத்தாலம் அரசு மருத்துவ மனையின் மயக்க நிபுணர் டாக்டர் பரணிதரன், ஸ்டாப் நர்ஸ் அனுஷியா ஆகியோர் அடங்கிய குழு வினர், பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவ மனை யில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவு, குழந்தை கள் நலப்பிரிவு, புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு, ஐசியு வார்டு, எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை பிரிவு, கண்- காது- மூக்கு- தொண்டை சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட 18 பிரிவு களிலும் நேரில் சென்று பார்வையிட்டு, ஒவ்வொரு பிரிவிலும் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் முறை, நோயாளிகளின் வருகை, தேவையான மருந்துகள் வழங்கும் பணிகள் ஆகிய வற்றைப் பார்வையிட்டு அதற்கு தகுந்தபடி மதிப் பெண்களை வழங்கினர்.

இதில் பெரம்பலூர் அரசுத் தலைமை மருத்துவமனை 100க்கு 70மதிப்பெண்களை பெற்றால் இந்த பரிசுத் தொகையை பெறமுடியும்.

இந்த ஆய்வின்போது பெரம்பலூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் மாரி முத்து, பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவ மனை கண்காணிப்பாளர் டாக்டர் கலா, அரசுத் தலைமை மருத்துவமனை இருக்கை மருத்துவர் டாக்டர் சரவ ணன், செவிலியர் கண் காணிப்பாளர் மோனிகா ஆகியோர் உடனிருந்தனர்.

The post தரச் சான்றிதழுக்கான தகுதிகள் குறித்து பெரம்பலூர் தலைமை மருத்துவமனையில் காயகல்ப் குழுவினர் 2வது நாளாக ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article