தமிழ்மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு

1 week ago 5

மாணவ, மாணவியர்கள் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாட் தேர்வுகளுக்குப் பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதைப்போன்று தமிழ்மொழி இலக்கியத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் ‘‘தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு” நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024-2025ஆம் கல்வியாண்டிற்கான தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு 19.10.2024 (சனிக்கிழமை) அன்று நடத்தப்படவுள்ளது. இத்தேர்வில் 1500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்குப் பள்ளிக் கல்வித் துறை வழியாக மாதம் ரூ.1500 வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும் . இத்தேர்வில் 50 விழுக்காடு அரசுப்பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு பிற தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவார்கள்.

தமிழ்நாடு அரசின் 10ஆம் வகுப்புத் தமிழ்ப் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத் தலைநகரங்களில் இத்தேர்வு நடத்தப்படும். 2024-2025ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்துவகைப் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் (மெட்ரிக் / CBSE / ICSE / உட்பட) மாணவர்கள் 19.10.2024 அன்று நடைபெறவுள்ள இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 19.09.2024 வரை விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத்தொகை ரூ.50 சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் / முதல்வரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க 19.09.2024 கடைசி நாள் ஆகும்.

The post தமிழ்மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு appeared first on Dinakaran.

Read Entire Article