தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - சவுமியா அன்புமணி

2 days ago 1

சென்னை,

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து பாமக சார்பாக சவுமியா அன்புமணி தலைமையில் 300க்கும் மேற்பட்ட மகளிர் அணியினர் போராட்டம் நடத்தினர். அவர்களை கைது செய்த காவல்துறையினர் திருவல்லிக்கேணியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அடைத்து வைத்தனர். மாலை 6 மணிக்கு காவல்துறையினர் சவுமியா மற்றும் அவரோடு கைது செய்யப்பட்ட 300க்கும் மேற்பட்டோரை விடுவித்தனர்.

பின்னர் சவுமியா அன்புமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

"எங்களை கைது செய்ய முதல் ஆளாக வருகிறார்கள். எங்களை கைது செய்ய வந்த காவல்துறை, பெண் குழந்தைகளைக் காப்பாற்றி இருக்கலாமே. பெண்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை. கடந்த இரண்டு வருடங்களில் பாலியல் வன்கொடுமை இரு மடங்கு அதிகரித்துள்ளது. வட இந்தியாவைப் போல தமிழ்நாட்டிலும் பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது. எங்கள் குழந்தைகளை எப்படி வெளியே அனுப்புவது. உங்களுக்கும் பெண் குழந்தை உள்ளது.

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலங்களில் பட்டியலில் தமிழ்நாடு நான்காவது இடத்தில் உள்ளது. எங்கள் போராட்டதால்தான் ஞானசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார். மறுபடி மறுபடியும் குற்றம் செய்யக்கூடிய மனநோயாளி ஞானசேகரன். இதுவரை ஏன் குண்டர் சட்டத்தில் அவரை அடைக்க வில்லை. மதுவும் போதையும்தான் பாலியல் வன்கொடுமை நடக்க காரணம்" எனத் தெரிவித்தார்.

 

Read Entire Article