சென்னை: தமிழ்நாட்டில் 4 கூடுதல் எஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை மாவட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்பியாக இருந்த சவுந்தரராஜன் நீலகிரி மாவட்ட தலைமையிட கூடுதல் எஸ்பியாகவும்,
நீலகிரி மாவட்ட தலைமையிட கூடுதல் எஸ்பியாக இருந்த தங்கவேல் காஞ்சிபுரம் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் எஸ்பியாகவும், கரூர் மாவட்ட தலைமையிட கூடுதல் எஸ்பியாக இருந்த பிரேமானந்தன் கோவை மாவட்ட தலைமையிட கூடுதல் எஸ்பியாகவும், கள்ளக்குறிச்சி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்பியாக இருந்த மணிகண்டன் நீலகிரி மாவட்ட சைபர் க்ரைம் பிரிவு கூடுதல் எஸ்பியாகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
The post தமிழ்நாட்டில் 4 கூடுதல் எஸ்பிக்கள் பணியிட மாற்றம்: காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் நடவடிக்கை appeared first on Dinakaran.