பயிற்சிகளின் விவரம்:
1. A. Graduate Apprentices – (Engineering/ Technology): மொத்த இடங்கள்: 500. உதவித் தொகை: ரூ.9,000.
பயிற்சி காலம்: ஒரு வருடம்.
பாடப்பிரிவுகள் வாரியாக அப்ரன்டிஸ்கள் விவரம்:
i) சிவில் இன்ஜினியரிங்- 460.
ii) எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்- 28 இடங்கள்.
iii) ஆர்க்கிடெக்சர்- 12.
2. B. Technician (Diploma) Apprentices (Engineering/Technology). மொத்த இடங்கள்: 160. உதவித் தொகை: v8,000. பயிற்சி காலம்: ஒரு வருடம்.
பாடப்பிரிவுகள் வாரியாக அப்ரன்டிஸ்கள் விவரம்:
i) சிவில் இன்ஜினியரிங்- 150
ii) எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்-5
iii) ஆர்க்கிடெக்சர்-5.
3. C. Non- Engineering Graduates
மொத்த இடங்கள்: 100. உதவித் தொகை: ₹9,000.
பயிற்சி காலம்: ஒரு வருடம்.
பாடப்பிரிவுகள் விவரம்:
பிஏ/பிஎஸ்சி/பிகாம்/பிபிஏ/பிசிஏ/பிபிஎம்.
தகுதி: அப்ரன்டிஸ் பயிற்சி வழங்கப்படும் பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் Graduate Apprentices (Engineering) பயிற்சிக்கு பி.இ.,/பி.டெக்., பட்டமும், Diploma Apprentices (Engineering) பயிற்சிக்கு டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பும் முடித்திருக்க வேண்டும். Graduate Apprentices (Non-Engineering) பிரிவுக்கு ஏதாவதொரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். 2020ம் கல்வியாண்டிற்கு பின்னர் படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கெனவே பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள், தற்போது பயிற்சி பெற்றுக் கொண்டிருப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.
டிப்ளமோ/பி.இ.,/பி.டெக்.,/இதர பட்டப்படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுபவர்களின் விவரம் 2025ம் ஆண்டு ஜன. 8ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும். 2025 ஜன 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை நேர்முகத் தேர்வு நடைபெறும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: பொதுப்பணித்துறை அலுவலகம், சென்னை.
www.nats.education.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் தங்களுடைய கல்வித்தகுதி மற்றும் இதர விவரங்களை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் மேற்குறிப்பிட்ட இணையதளத்தால் வழங்கப்படும் Unique Enrolment Number ஐ பயன்படுத்தி அதே இணையதளம் மூலமாக Public Works Department, Tamilnadu என்ற லிங்க்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.12.2024.
The post தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் அப்ரன்டிஸ்கள் appeared first on Dinakaran.