தமிழ்நாடு அரசின் திட்டங்கள் விழிப்புணர்வு வாகன பிரசாரம்

1 week ago 7

நாகர்கோவில், செப்.12: தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு வாகன பிரசாரத்தினை மாவட்ட கலெக்டர் அழகுமீனா கொடியசைத்து தொடங்கி வைத்தார். கன்னியாகுமரி மாவட்ட சமூகநலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட அதிகாரமளித்தல் மையத்தின் வாயிலாக தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சட்டங்கள் குறித்த பதாகை அடங்கிய விழிப்புணர்வு வாகன பிரசாரம் நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்றது. குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறியதாவது: தமிழ்நாடு அரசு சமூகநலத்துறையின் வாயிலாக செயல்படுத்தி வரும் திட்டங்கள் மற்றும் சட்டங்கள், அதற்கான வழிகாட்டுதல்களை பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து ஒலிப்பெருக்கி மூலமாக மாவட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளிலும் பொதுமக்களிடையேயும் கொண்டு சேர்க்கும் வகையில் குழந்தை திருமணம் தடுப்புச்சட்டம், குழந்தைகளுக்கான உதவி எண், பெண்குழந்தை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், மகளிர் உதவி எண், முதலமைச்சரின் பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம் மற்றும் புதுமைப்பெண் திட்டம் ஆகிய தகவல்கள் அடங்கிய பதாகைகள் வாகனத்தின் அனைத்து பக்கங்களிலும் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசின் திட்டங்கள் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவியரிடையே எளிதாக சென்றடையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post தமிழ்நாடு அரசின் திட்டங்கள் விழிப்புணர்வு வாகன பிரசாரம் appeared first on Dinakaran.

Read Entire Article