தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு? அரசு விளக்கம்

1 day ago 2

சென்னை,

பீகார், ஆந்திர பிரதேசம், கர்நாடகா, ஒடிசா, தெலுங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கார் உள்ளிட்ட மாநிலங்கள் தன்னிச்சையாகவே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தத் திட்டமிட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்தவகையில்,

தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஆணையம் அமைத்திருக்கிறது. மிக விரைவில் கணக்கெடுக்க வீடு, வீடாக வருவார்கள். வெறும் சாதி பெயர் மட்டும் குறிப்பிடப்பட்டு நீங்கள் கையெழுத்திட்ட பிறகு பக்கத்தில் கிறிஸ்தவர் அல்லது முஸ்லிம் என்று அவர்களே எழுதிக் கொள்வார்கள் என்று சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.

இதனை தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் மறுத்துள்ளது. மேலும் இது ஒரு வதந்தி. கடந்த 2020-ம் ஆண்டு முதல் சமூக வலைத்தளங்களில் இந்த வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்று கூறப்பட்டு உள்ளது.

Read Entire Article