தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

1 day ago 1

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

8-ந்தேதி முதல் 10-ந்தேதி வரையில் கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 10-ந்தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொறுத்தவரை இன்று (ஞாயிற்றுக்கிழமை) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் ஒட்டியும் இருக்கும்.

குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்தில் சூறாவளிக்காற்று வீசலாம். அதேபோல தென்கிழக்கு அரபிக்கடலின் தெற்கு, மேற்கு, மத்திய மேற்கு பகுதிகளிலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் இன்று செல்லவேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Read Entire Article