தமிழக அரசுடன் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக் காலம் கடந்தாண்டு முடிவடைந்த நிலையில், பதவி நீட்டிப்பு செய்யப்படவில்லை. விதிகள்படி புதிய ஆளுநர் பதவியேற்கும் வரை, ஏற்கெனவே உள்ள ஆளுநர் தொடருவார் என்பதால், அவர் ஆளுநராக உள்ளார். இந்நிலையில், நேற்று ஆளுநர் ரவி டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் ஆளுநரின் செயலர், பாதுகாப்பு அலுவலர்கள் சென்றுள்ளனர். தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென்று டெல்லி பயணம் மேற்கொண்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.