தன்பாலின திருமண தீர்ப்பு: மாறு ஆய்வு செய்ய கோரிய மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!!

4 hours ago 2

டெல்லி: தன்பாலின திருமணத்திற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மாறு ஆய்வு செய்ய கோரிய மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்தியாவில் தன்பாலின உறவு என்பது குற்றமல்ல என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கியுள்ளது. இருப்பினும் தன்பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடையாது. பல மேலை நாடுகளில் தன்பாலின திருமணத்திற்கு சட்டப்பூர்வ அனுமதி கொடுக்கப்பட்டுள்ள போதிலும் இந்தியாவில் இதுவரை ஓரின திருமணத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்படவில்லை.

இந்நிலையில், 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் இது தொடர்பாக வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் தன்பாலின திருமணத்தை சட்டரீதியாக அங்கீகரிக்க மறுத்து உத்தரவு பிறப்பித்தது. அந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி 13 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அந்த மனுக்களை நீதிபதி கவாய், சூரியகாந்த், நாகரத்னா, நரசிம்ஹா, தீபங்கர் தத்தா ஆகியோரை உள்ளடகிய 5 நீதிபதிகள் அமர்வு விசாரணை செய்தது. அப்போது முன்பு வழங்கப்பட்ட தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

The post தன்பாலின திருமண தீர்ப்பு: மாறு ஆய்வு செய்ய கோரிய மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!! appeared first on Dinakaran.

Read Entire Article