“தன்னை ஒரு சூப்பர் ஸ்டாராக நினைக்கிறார் ரேவந்த் ரெட்டி” - அல்லு அர்ஜுனுக்கு அண்ணாமலை ஆதரவு!

12 hours ago 1

சென்னை: தான் ஒரு சூப்பர் ஸ்டார் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி நினைத்துக் கொள்கிறார். இப்போது கூட அவர் காங்கிரஸ் கட்சி சார்பில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

சென்னையில் இன்று (டிச.24) செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: “தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் பேட்டி ஒன்றை பார்த்தேன். தெலங்கானாவில் சூப்பர் ஸ்டார் ஆவதற்காக அவர் போட்டி போடுகிறார் என்று நினைக்கிறேன். அல்லு அர்ஜுனை விட தான் பெரிய சூப்பர் ஸ்டார் என்று காட்டிக் கொள்ள அவர் இவ்வாறு செய்கிறார். தான் ஒரு சூப்பர் ஸ்டார் என்று அவர் நினைத்துக் கொள்கிறார். இப்போது கூட அவர் காங்கிரஸ் கட்சி சார்பில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

Read Entire Article