தனிமையில் சந்திப்பு: மாணவியை தாயாக்கிய ஆசிரியர் - போக்சோ சட்டத்தில் கைது

2 hours ago 2

சேத்தியாத்தோப்பு,

கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு கடந்தாண்டு பிளஸ் 2 படித்து தேர்ச்சி பெற்ற 17 வயது மாணவி ஒருவர், தற்போது சென்னையில் பி.எஸ்சி., நர்சிங் படித்து வருகிறார். இந்த நிலையில் அந்த மாணவிக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், மாணவியிடம் விசாரித்தபோது, மேல்நிலை பள்ளியில் படித்தபோது வேதியியல் ஆசிரியர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தொடர்ந்து நடந்த விசாரணையில் அந்த மாணவி, சொந்த ஊரில் படித்த அரசு பள்ளியில் வேதியியியல் ஆசிரியராக பணிபுரிந்து வந்த புடையூர் கிராமத்தை சேர்ந்த மலர் செல்வம் ( 50) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து வந்ததில் கர்ப்பம் அடைந்ததும், பின்னர் அவர் சென்னையில் உள்ள கல்லூரியில் நர்சிங் படித்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து உதவி தலைமை ஆசிரியர் மலர் செல்வத்தை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைந்தனர்.

முன்னதாக பதவி உயர்வு பெற்று உதவி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வரும் மலர் செல்வத்துக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 மகள்கள், ஒரு மகன் இருப்பதும் விசாரணையில் தொியவந்தது. 

Read Entire Article