திருப்பூர், டிச.31: திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து காய்கறிகள் தக்காளி, வெங்காயம், பூண்டு, வர மிளகாய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது, இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மழை குறைந்து இயல்பு நிலை திரும்பி உள்ளது.
தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்படும் தக்காளி அதிகாலை நேரத்தில் உழவர் சந்தையில் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கடந்த சில நாட்களாக தக்காளி வாரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தென்னம்பாளையம் தினசரி சந்தை மட்டுமல்லாது மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலையோர கடை அமைத்தும் சரக்கு வாகனங்களிலும் தக்காளி விற்பனை அதிகரித்துள்ளது. வரத்து அதிகமானதால் 4 கிலோ தக்காளி 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விலை குறைந்திருப்பதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The post தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை குறைவு appeared first on Dinakaran.