வெலிங்டன்,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை இருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி வெலிங்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 280 ரன்களும், நியூசிலாந்து 125 ரன்களும் அடித்தன.
பின்னர் 155 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 6 விக்கெட்டுகளை இழந்து 427 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதன் மூலம் நியூசிலாந்து வெற்றி பெற 582 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி வெறும் 259 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணி மாபெரும் வரலாற்று சாதனையை படைத்துள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு:-
147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 5 லட்சம் டெஸ்ட் ரன்களை கடந்த முதல் அணி என்ற மாபெரும் உலக சாதனையை இங்கிலாந்து படைத்துள்ளது. இங்கிலாந்து இதுவரை 1082 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது.
இந்த சாதனை பட்டியலில் 4 லட்சத்திற்கு மேற்பட்ட ரன்களுடன் ஆஸ்திரேலியா 2-வது இடத்திலும், 2 லட்சத்திற்கு மேற்பட்ட ரன்களுடன் இந்தியா 3-வது இடத்திலும் உள்ளன.