டி20 கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மாபெரும் சாதனை படைத்த இந்தியா

2 hours ago 1

ஜோகன்னஸ்பர்க்,

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் 3 போட்டிகளின் முடிவில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டி20 போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வான்ரர்ஸ் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஆரம்பம் முதலே அதிரடியில் வெளுத்து வாங்கியது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 283 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 120 ரன்களும், சாம்சன் 109 ரன்களும் குவித்து அசத்தினர்.

இதனையடுத்து 284 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணி வெறும் 18.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 148 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 135 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் தென் ஆப்பிரிக்காவை அதிக ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அணி என்ற மாபெரும் சாதனையை இந்தியா படைத்துள்ளது. இதற்கு முன்னர் ஆஸ்திரேலியா 111 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. தற்போது இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது.

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப்சிங் 3 விக்கெட்டுகளும், வருண் சக்ரவர்த்தி, அக்ஷர் படேல் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

Read Entire Article