துபாய்,
8 அணிகள் இடையிலான 11-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
இதில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள 8 முறை சாம்பியனான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் இன்று பாகிஸ்துடன் நேற்று மோதியது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்தது.
பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ஷாஜாய்ப் கான் 159 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் சமர்த் நாகராஜ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து 282 ரன் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்தியா 47.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 238 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம் பாகிஸ்தான் அணி 43 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக நிகில் குமார் 67 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் அலி ராசா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்திய அணி தனது 2வது ஆட்டத்தில் நாளை (டிசம்பர் 2ம் தேதி) ஜப்பானை எதிர்கொள்கிறது.