ஜம்மு-காஷ்மீரில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000 வழங்கப்படும்: மல்லிகார்ஜுன கார்கே அறிவிப்பு

1 week ago 7

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000 வழங்கப்படும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற தேர்தலையொட்டி அனந்த்நாக்கில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், காஷ்மீரில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000 வழங்கப்படும்.

காங்கிரஸ் கூட்டணி வென்றால் அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.25 லட்சத்தில் மருத்துவ காப்பீடு வழங்கப்படும். ஒரு லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்புதல், ஒவ்வொரு குடும்பத்துக்கும் 11 கிலோ அரிசி வழங்கப்படும். சுய உதவிக் குழுப் பெண்களுக்கு ரூ.5 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கப்படும். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் குடியேறிய காஷ்மீர் பண்டிட்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும். ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 5 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என கார்கே உறுதி அளித்துள்ளார்.

 

The post ஜம்மு-காஷ்மீரில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000 வழங்கப்படும்: மல்லிகார்ஜுன கார்கே அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article