தொண்டி, அக்.22: தொண்டியில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சார்பில் இஸ்லாமிய வாழ்வியல் மாநாட்டை முன்னிட்டு மார்க்க விளக்க பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ராமநாதபுரம் வடக்கு மாவட்டம் தொண்டி முபின் கிளை சார்பாக மாவட்ட நிர்வாகிகள் ரஹ்மான் அலி, மாவட்ட தலைவர் தலைமையில் அல்பார் அமீன், மாவட்டத் துணைத் தலைவர் அபுதாஹீர், மாவட்ட துணைச் செயலாளர் யாசர் அரஃபாத், ரபீக் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் மார்க்க விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது.இதில் மாநில பேச்சாளர் சம்சுலுஹா ரஹ்மானி கடந்து வந்த பாதை என்ற தலைப்பிலும், சுலைமான் இஸ்லாமும் இன்றைய சமூகமும் என்ற தலைப்பிலும், அப்துல் அஜீஸ் வாழ்வியல் மாநாடு ஏன் என்ற தலைப்பிலும் பேசினர். பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கிளைத்தலைவர் ரியாத் நன்றி கூறினார்.
The post ஜமாத் பொதுக் கூட்டம் appeared first on Dinakaran.